புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கான ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கான நீதிபதிகள் ெபயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் தொடர்பான பரிந்துரையை ெசய்தது.
அந்த பட்டியலில் உள்ள 6 பேரில் 3 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிபி வராலே கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி ஏஎம் மேக்ரே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 3 நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவர்களில் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளீதர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.