தங்க கடத்தல் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (யுஏஇ) விமானம் மூலம் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்தது கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சுங்கத் துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள யுஏஇ துணைத் தூதரக முகவரியிட்டு இந்த கடத்தல் நடைபெற்றதும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர், யுஏஇ துணைத் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் அடங்கிய அமர்வு, வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.