உடல் நலக்குறைவு: வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் மறைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர் கோவை தங்கம். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர்.
image
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து உடல் நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை தங்கம், நேற்று நள்ளிரவு 12.28 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.