சேலம்: மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக முழு கொள்ளவை எட்டியது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 28,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
