பீகாரில் போலீஸ் பஸ், பைக்குடன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், பஸ்சில் சிக்கிய பைக் ஓட்டுனர் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் பைக்கின் பெட்ரோல் டாங்க் தீ பிடித்தது.
பைக் ஓட்டுனர் போலீஸ் பஸ்சின் அடியில் சிக்கியதால் மீளமுடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார்.
தீ பற்றியதும் போலீசார் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர்.