
திருமணம் பற்றி திரிஷா கூறிய பதில்
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛பொன்னியின் செல்வன்' படத்தில் அவர் ஏற்று நடித்த குந்தவை வேடம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. தமிழ் சினிமாவில் இப்போதும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதை நெருங்கி விட்டார். ஆனால் திருமணம் செய்யவில்லை.
இதுபற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ஏதோ கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நான் நபரை சந்திக்க வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் திருமணம் செய்வேன்'' என்கிறார் திரிஷா.
சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் உடதன் திரிஷாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் திருமணம் செய்யும் முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.