புடினுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி


மின் நிலையங்களை ரஷ்யா அழைத்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்

கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில், குடியிருப்பில் இருந்த ஐந்து பேர் பலியாகினர்  

உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் கஜகஸ்தான் மாநாட்டில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என உக்ரைன் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் புதிய தாக்குதலை நடத்த திட்டமில்லை. உக்ரைனை அழிப்பது ரஷ்யாவின் நோக்கம் அல்ல’ எனவும் கூறினார்.

Vladimir Putin

இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள தனது பதிவில்,

‘கடந்த அக்டோபர் 10ஆம் திகதி முதல் ரஷ்ய ராணுவம் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில், உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இதன் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை’ என தெரிவித்துள்ளார்.

Volodymyr Zelensky

File Image/AP

மின்தடை காரணமாக, உக்ரைனில் முடிந்த அளவு மின்சாரத்தை சேமிக்கவும், அதிக ஆற்றல் நுகர்வு கொண்ட சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.