விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்; படம் குறித்து சுவாரஸ்ய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சூட்டிங் விரைவில் முடிவடையபோகிறது. 

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் இப்படத்தில் முதல் சிங்கிள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. வாரிசு படத்தில் விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் நடித்திருக்கிறார். அவர் இப்போது படம் குறித்து சர்பிரைஸான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’ஊ சொல்றியா.. ஊஊ சொல்றியா’ நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது, வாரிசு படத்தில் நடித்த அனுபவம் குறித்து சம்யுக்தா பகிர்ந்து கொண்டார்.

வாரிசு படத்தில் நடித்து கொண்டிருப்பது குறித்து மாகாபா அவரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சம்யுக்தா, ” மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு சொன்னார். எனக்கு அது ஒரு சூப்பரான அனுபவம். படம் ரொம்ப பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. விஜய் சார் ரொம்ப புரொபஷ்னல். 7 மணிக்கெல்லாம் செட்டுக்கு வந்திருவாரு. அவரு டான்ஸ் பன்றதை நேரடியாக பார்க்குற வாய்ப்பு கிடைத்தது. அது வேறலெவல் அனுபவம். அவரு ஒருமுறை டான்ஸ் ஆடி முடிச்சும் மொத்த செட்டும் கைதட்டும்” என வாரிசு படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். சம்யுக்தா கொடுத்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.