புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு, ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் குறைந்து, 83 ரூபாய் 8 காசுகளாக ஆக சரிவடைந்துள்ளது.
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் உலக பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகிறது. மேலும், போரால் கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. வட்டி விகித அதிகரிப்பு, அன்னிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவையை அதிகரித்து அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. அதேவேளை, முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83ரூபாயை கடந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வருகிறது. டாலருக்கு நிகரான மதிப்பு நேற்று 82 ரூபாய் 99 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வர்த்தக துவக்கத்தில் மேலும் 9 காசுகள் சரிந்து 83 ரூபாய் 8 காசுகளாக சரிவை சந்தித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement