மாரடைப்பு வந்தவர்களுக்கு CPR முதலுதவி வழங்கும் முறையை அறிந்து கொள்ள புதுகருவி!

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டிய CPR (Cardiopulmonary resuscitation) எனப்படும் முதலுதவியை வழங்கும் முறையை அறிந்து கொள்ள புதிய கருவி ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 4 ஆயிரத்து 280 பேர் திடீர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படுவோரில் 90 விழுக்காட்டினர் மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே உயிரிழக்கின்றனர்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி வழங்குவதன் மூலம் உயிரிழப்பை பெருமளவில் தடுக்க இயலும். CPR முதலுதவியை எவ்வாறு வழங்குவது என பயிற்றுவிக்க புதிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மறு உயிர் தரு கலைப் பயிலகம் என்ற பெயருடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம் ஆர்வம் உள்ள எவரும் CPR முதலுதவியை எவ்வாறு
வழங்குவது எனக் கற்றுக் கொள்ளலாம். இக்கருவி மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு CPR முதலுதவி வழங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்வி நிலையங்களிலும், தொழிற்சாலைகளிலும், அனைத்து தரப்பு மக்களிடமும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் வகையிலான சிகிச்சை முறையை கொண்டு சேர்க்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆறு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட மறு உயிர் தரு கலைப்பயிலகக் கருவியை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.