ம.பி. பேருந்து விபத்தில் 15 பேர் பலி:  சொந்த ஊருக்குப் பயணித்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்

ரேவா: மத்தியப்பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றபோது இச்சோகச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து விபத்து நடந்த ரேவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் பாஷின், “விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் உ.பி. செல்ல கட்னி பேருந்துநிலையத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டனர். மொத்தம் 100 பேர் பேருந்தில் இருந்துள்ளனர்.

ரேவா மாவட்ட சுஹாங்கி பஹாரி பகுதியில் பேருந்து சென்றபோது நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியது. இதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சுஹாங்கி மாவட்ட மருத்துவமனையிலும் படுகாயமடைந்தவர்கள் ரேவா சஞ்சய் காந்தி மெம்மோரியல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.