திருவிக.நகரில் சேவல் சண்டை: போலீசார் வந்ததும் கும்பல் ஓட்டம்

பெரம்பூர்: சென்னை திருவிக.நகர் மரியநாயகம் தெருவில் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சேவல் சண்டையில் ஈடுபட்டு வருவதாக திருவிக.நகர் போலீஸ் உதவி ஆய்வாளர் ரவீந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

அப்போது அங்கு 50க்கு மேற்பட்டவர்கள் 10 சேவல்களை வைத்துக்கொண்டு சண்டை போட்டி நடத்திக்கொண்டிருந்தனர். அவற்றை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்ததும் சேவல் சண்ைட போட்டி நடத்திய அந்த கும்பல், தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.