சென்னை மழைநீர் வடிகால் குழியில் விழுந்து பத்திரிகையாளர் பலி..!

சென்னையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (25). இவர் முன்னணி செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், முத்துகிருஷ்னன் நேற்று பணிமுடிந்து வீடு திரும்பியபோது கே.கே.நகர் காசி தியேட்டர் அருகே தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்துள்ளார்.

அப்போது குழியில் இருந்த கூர்மையான கம்பிகள் அவரது உடலை துளைத்து படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துகிருஷ்ணனின் மரணம் பத்திரிகை துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.