கோட்டயத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 2 மாவட்டங்களிலும் வாத்துகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாத்துப் பண்ணைகளும் உள்ளன. இங்கு இருந்து தான் வாத்துகள், முட்டைகள் பல்வேறு பகுதிகள், தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள வழுதானம் பகுதியில் உள்ள பண்ணைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் திடீரென செத்தன. இதையடுத்து வாத்து பண்ணைகளில் பரிசோதனைகள் நடந்தன.

அவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 695 வாத்துகள் கொல்லப்பட்டன. இன்றும் வாத்துகளை கொல்லும் பணி நடைபெற்று வருகிறது. பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை தொடர்ந்து நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கோட்டயம் பகுதிகளில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் பரவி வருவது தெரியவந்து உள்ளது.

கடந்த சில தினங்களாக இங்குள்ள மீனச்சல் பகுதியில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் செத்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீனச்சல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடைவிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பன்றிகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் தடைவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.