பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி, அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். கூடுதலாக தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு என கூறியிருக்கிறார்.
அந்த செய்தியாளர் சந்திப்பில், ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திமுக ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017இல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனது வைத்தால் தான் அதிமுக ஒன்றிணையும். அதிமுக என்பது வேறு ஒரு கட்சி அது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கும் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது விடியல் ஆட்சியில்லை, அதை முதல்வரே கண்டு பயப்படும் அளவிற்கான ஆட்சியாக இருக்கிறது. ஆளுநர் ஆர் எம் ரவி ஓர் முக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்து விடும்.பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தீவிர வாதம் அதிகரித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 1991 ஜனவரியின் நிலை மீண்டும் உருவாகும்” என்றார்.