குஜராத் தொங்கு பாலம் விபத்து : 35 பேர் பலி… சரிசெய்து 4 நாள்களில் கொடூரம்..

Gujarat Morbi Bridge Collapsed : குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 50 வருடங்களுக்கு மேல் பழைமையான தொங்கு பாலம், இன்று மாலை இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், பலரும் ஆற்றில் விழுந்து தத்தளித்து வருகின்றனர். 

சிலர் ஆற்றில் நீந்தி கரை திரும்ப முயற்சித்து வருகின்றனர். மேலும், இடிந்து ஆற்றில் விழுந்த பாலத்தின் முனையில்ஸ, தண்ணீருக்கு சில அடிகள் மேலே நின்றுகொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அதில், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளனர். 

இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது. 100 பேருக்கு மேல் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என அறிவித்த்துள்ளார். 

மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து குஜராத் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா கூறுகையில்,”இந்த பாலம் கடந்த வாரம்தான் புனரமைக்கப்பட்டது. எங்களுக்கும் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை 35 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. அரசு இந்த விபத்திற்கு பொறுப்பேற்கும்” என தெரிவித்துள்ளார்.  

மோர்பி தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னமாகும். பழுதுபார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு முன்பு, கடந்த அக்டோபர் 26 அன்று, குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.