சென்னை அருகே பள்ளிக்கரணை பகுதியில் குமரன் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் அருண்குமார் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டவர்.தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணிபுரிகின்ற பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னும் கூட அந்த பெண்களை வீடியோ காலில் பேச சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில நாட்கள் இதுபோல சென்ற நிலையில் தங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் கைவிடப்பட்ட அந்த பெண்கள் வேதனையில் இருந்து வந்தனர்.
அதன் பின் அருண்குமாருடைய செல்போனில் தங்களது ஆபாச படம் இருப்பது தெரியவந்து அதிர்ச்சியந்துள்ளனர். உடனே இது குறித்து அந்தப் பெண்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அருண்குமாரின் செல்போனை கைப்பற்றி அதை ஆராய்ச்சி செய்த போது அதிலிருந்து பல ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாரிடம் அந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து விவரித்து கதறி அழுதுள்ளனர். இதை தொடர்ந்து, போலீசார் அருண்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.