“50 சதவிகித இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டிய நேரம் இது!" – பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதையடுத்து தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக குரலெழுப்பிவருகின்றன. அதே சமயம் பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதனை வரவேற்றிருக்கின்றன.

இட ஒதுக்கீடு

இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், 50 சதவிகித இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டிய நேரம் இது என்று தற்போது கூறியிருக்கிறார். EWS இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “இது சரிதான். ஆனால் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பும் சரியாக செய்யப்பட வேண்டியதும் அவசியம்.

நிதிஷ் குமார்

இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருந்தோம். எனவே, 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற வரம்பை உயர்த்தவேண்டிய நேரம் இது. இந்த வரம்பு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினரின் மக்கள்தொகை விகிதத்தில், அவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கிறது” என்று கூறினார்.

அதையடுத்து நிதிஷ் குமாரின் கருத்தால் அவரை விமர்சித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அரவிந்த் குமார் சிங், “50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், அரசியலமைப்பு விதிமுறைகளின்படி பீகாரில் தேவையானதைச் செய்யுங்கள். நாங்கள் அதை வரவேற்போம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.