வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு, அந்த நாட்டு பார்லிமென்டின் செனட் சபையில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
அமெரிக்க பார்லிமென்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்கள் நடக்கின்றன. வழக்கமாக அதிபரின் ஆட்சிக்காலத்தின் இடையில் நடக்கும் தேர்தல்களில், எதிர்க்கட்சியே முன்னிலை பெறும்.
தற்போது அமெரிக்காவில் நிலவும் விலைவாசி உயர்வு, ஜோ பைடனின் செல்வாக்கு குறைவு ஆகியவை, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக இருக்கும் என கணிக்கப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில், குடியரசு கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், செனட் சபையையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மொத்தம், ௧௦௦எம்.பி.,க்கள் உள்ள செனட் சபைக்கு, நவேடாவில் கேத்தரின் கார்டஸ் மோஸ்டோ வென்றார்.
இதனால் ஜனநாயகக் கட்சியின் பலம், ௫௦ ஆக உயர்ந்தது. இதையடுத்து பெரும்பான்மையையும் பெற்றுள்ளது. ஓட்டெடுப்புகளில், அக்கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிசும் ஓட்டளிக்க முடியும்.
ஜார்ஜியாவில் வரும் டிச., ௬ல் தேர்தல் நடக்க உள்ளது. அதில், ஜனநாயக கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு வென்றால், பெரும்பான்மை பலம் மேலும் உயரும்.
இந்த தேர்தல் வெற்றிக்கு ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 2024ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவை, அவர் நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement