11 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சனத் தொகை 7 பில்லியனில் இருந்து 8 பில்லியனை விட கடந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பதன் விளைவே இவ் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும் எனவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.