மலேசிய காதலியை கரம் பிடித்த ராமநாதபுரம் இளைஞர்..! இந்திய கலாசாரத்தின்படி தாலி கட்டி டும் டும் டும்…

மலேசிய காதலியை ராமநாதபுரம் இளைஞர் இந்திய கலாசாரத்தின் படி திருமணம் செய்துக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடத்தைச் சேர்ந்த அருண்செல்வம் மாலத்தீவில் ஹோட்டலில் வேலைப்பார்த்த போது அங்கு மேலாளராக பணிபுரிந்த மலேசிய பெண் யீஷ்யானை காதலித்தார்.

இந்திய கலாசாரத்தின் மீது விருப்பம் கொண்ட யீஷ்யான் தமிழகத்தில் திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதால் இரண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் ராமநாதபுரத்தில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடந்தது. மணமகன் செண்டை மேளம் இசைக்க, மணமகள் சிங்கியும் இசைத்து மகிழ்ந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.