கருணாநிதி பேனா.. மாஸ் தகவல்; ஜொலிக்க போகும் மெரினா பீச்!

உலகத்தின் நீளமான 2வது கடற்கரையாக சென்னை மெரினா விளங்கி வருகிறது. இங்கு தான் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கவும், சுற்றி பார்க்கவும், நாள்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த 4 தலைவர்களின் நினைவிடங்களுக்கும் தவறாமல் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நினைவூட்டுவதற்காக பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி நினைவிடம் அருகே வங்க கடலில் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.

இந்த பேனா சின்னம் 42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் கடலுக்குள் புல்வெளிகளுக்கு நடுவில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதி நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் விதமாக, உயர்தர பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேனா நினைவு சின்னத்துக்கு

கூட்டணிக் கட்சிகள் ஆதரவையும், மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தன. இதற்கிடையே பேனா சின்னம் குறித்த எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் அமைச்சர் கூறியுள்ள புதிய தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதாவது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு அட்டை வழங்கி பேசினார்.

இதன் பிறகு அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகள் விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடைபெறும்.

விதிமுறைகளை மீறி, தமிழக அரசு எந்த பணியிலும் ஈடுபடாது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்து உள்ளது. தற்போது மழை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாகி வருகிறது.

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் முடிந்த அளவு விரைவாக திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.