புதுடில்லி,
‘கியா’ நிறுவனம், கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அதன் முதல் மின்சார காரான ‘ஈ.வி., 6’ எனும் காருக்கு, எதிர்பார்த்ததை விட, மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டு இருந்த 100 கார்களையும் கடந்து, 355 கார்களுக்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதனால், வினியோகத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அதிக கார்களை இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது, கியா நிறுவனம்.
இந்த காரின் விலை, 59.95 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.
விபரக் குறிப்பு
கார் வகை ரியர் வீல் டிரைவ் ஆல் வீல் டிரைவ்
பேட்டரி 77.4 கி.வாட் 77.4 கி.வாட்
ரேஞ்ச் 528 கி.மீ., 425 கி.மீ.,
ஹார்ஸ் பவர் 229 பி.எஸ்., 325 பி.எஸ்.,
டார்க் 350 என்.எம்., 650 என்.எம்.,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement