இதுதான் எனது கடைசி உலகக்கோப்பை! கிறிஸ்டியானோ ரொனால்டோ


கத்தார் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதாக போர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ  ஓய்வு

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்திய நேர்காணலில் தனது ஓய்வு குறித்து தெரிவித்தார்.

ரொனால்டோ கூறுகையில், ‘இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். எனவே அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான்.

நான் 40 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன். அந்த வயது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@EPA

எனது மனநிலை தற்போது உலகக்கோப்பையை நோக்கி உள்ளது. நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை.

அதன் பின்னர் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. ரசிகர்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பார்கள்’ என தெரிவித்தார்.

தற்போது 37 வயதாகும் ரொனால்டோ, 191 சர்வதேச போட்டிகளில் 117 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.        

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@Youtube

கிறிஸ்டியானோ ரொனால்டோ/Cristiano Ronaldo

@Getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.