புதுச்சேரி : ஈமச்சடங்கு நிதியுதவி, 254 பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வேளாண் அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு: முதியோர், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் இறந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், இதுவரை 317 பேர் பயன்பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக மேலும் கடந்த மாதம் 10ம் தேதிவரை விண்ணப்பித்துள்ள 254 பேருக்கு உயர்த்தப்பட்ட ஈமசடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரம் நேற்று முதல் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement