டெல்லியில் கொலை செய்யப்பட்டு உடலை 35 துண்டுகளாக்கி காட்டில் வீசப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தாவின் மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை மற்றும் பல எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த எலும்புகளை ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு தடயவியல் பரிசோதனை செய்ய டெல்லி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
மேலும், கொலையாளி அப்தாப் வீட்டில் இருந்து ஷ்ரத்தாவின் கைப்பை, உடை, ஷூ, 3 பெரிய பிளாஸ்டிக் கறுப்பு பைகள், கூர்மையான கத்தி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.