‛கனா, இந்திரா' : மதிய வேளையை மகிழ்ச்சியானதாக மாற்ற வரும் ஜீ தமிழின் இரண்டு புதிய சீரியல்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிது புதிதாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி விதவிதமான கதைக்களத்தில் தொடர்ந்து புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ‛‛அமுதாவும் அன்னலட்சுமியும், மாரி மற்றும் மீனாட்சி பொண்ணுங்க'' உள்ளிட்ட சீரியல்களை அறிமுகம் செய்தது. தற்போது அந்த சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில்கனா மற்றும் இந்திரா என இரண்டு புத்தம் புதிய சீரியல்களை இன்று(நவ., 21) மதியம் முதல் துவங்கி உள்ளது.

ஆண்களுக்கு பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் கிடையாது என துணிச்சலான பெண்ணாக ஐஏஎஸ் கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணின் கதையாக இந்திரா சீரியல் உருவாகி உள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் பௌஷி நாயகியாக நடிக்க அக்ஷய் கமல் நாயகனாக நடிக்கிறார். ப்ரேமி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அம்மா மற்றும் தாய் மாமாவுடன் வாழ்ந்து வரும் அன்பரசி கட்டாய திருமணத்தில் இருந்து தப்பித்து தனது கனவான தடகளத்துறையில் சாதித்தாளா? என்பது தான் கனா சீரியல் கதைக்களம். திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் நாயகியாக லட்சுமி பிரியா நடிக்க, விஷ்ணு நாயகனாக நடிக்கிறார். இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

உங்கள் இல்லம் தேடி வரும் கனா மற்றும் இந்திரா என்ற இரு புத்தம் புதிய சீரியல்களை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.