தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சக்கரபாணி என்பவர் இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவராக இருந்து வருகிறார். இன்று விடியற்காலை அவர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அந்த பகுதியை பரபரப்பானது. இது குறித்த தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் காவல்துறையின் மோப்பநாய் டாபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எனவே இன்று மாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துள்ளனர். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சக்கரபாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கும்பகோணம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.