FIFA உலகக்கோப்பையில் தொடரில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் பாதியில் ஆதிக்கம்
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டி அல் ரய்யன் மைதானத்தில் நடந்தது.
இதில் அமெரிக்கா – வேல்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் 36வது நிமிடத்தில், அமெரிக்காவின் டிமோத்தி வியா கோல் அடித்தார்.
இதற்கு வேல்ஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் அமெரிக்க அணி 1-0 என முன்னிலை வகித்தது.
@JEWEL SAMAD/AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES
பெனால்டி வாய்ப்பு
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் வேல்ஸ் அணி வீரர் காரெத் பாலே (82வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.
அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
@AFP
இந்தப் போட்டியில் அமெரிக்க அணியில் 4 வீரர்களும், வேல்ஸ் அணியில் 2 வீரர்களும் மஞ்சள் அட்டை பெற்றனர்.
அமெரிக்க அணி 59 சதவீதமும், வேல்ஸ் அணி 41 சதவீதமும் பந்தை தங்களிடம் தக்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
@RYAN PIERSE/GETTY
@Getty Images