சபரிமலை, கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில், மாத பூஜையின் போது, நடை காலை 5:00 மணிக்கு திறக்கப்படும். தற்போது மண்டல பூஜை, மகரஜோதி சீசனையொட்டி, இது அதிகாலை 3:00 மணிக்கு மாற்றப்பட்டது.
மாலையில் 5:00 மணிக்கு பதிலாக 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது.
தற்போது இது 3:00 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் ஒரு நாளில் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனம் செய்ய முடியும்.
‘இதனால், பக்தர்களின் காத்திருப்பு நேரம் மேலும் குறையும்’ என தேவசம்போர்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மதியம் உச்ச பூஜை முடிந்து நடை அடைத்த பின், பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்தது ஒரு மணி நேரம் குறைந்துள்ளது.
‘ஆன்லைன்’ வாயிலான முன்பதிவு கார்த்திகை பிறந்த பின் விறுவிறு என அதிகரித்து வருகிறது. இதை கவனித்து தேவசம் போர்டு அதிகாரிகளும், போலீசாரும் ஆலேசனை நடத்தி, நடை திறக்கும் நேரத்தை அதிகரித்துள்ளனர்.
அப்பம், அரவணைக்கு
18 கவுன்டர்கள் திறப்புசபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதமான அப்பம், அரவணை வாங்க 18 கவுன்டர்கள் உள்ளன. இதில் ஐந்து கவுன்டர்களில் பிரசாதம் ‘ஆன்லைன்’ பண பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது.இதற்காக, 18ம் படிக்கு வலது பக்கம் இதற்காக 11 கவுன்டர்கள் செயல்படுகின்றன. இதில் ஐந்து மற்றும் ஏழாம் கவுன்டர்களில் ‘கிரிடிட், டெபிட்’ கார்டுகள் மற்றும் யு.பி.ஐ., உள்ளிட்ட ஆன்லைன் வாயிலான பணபரிமாற்றம் மூலம் பிரசாதம் வழங்கப்படும். www.sabarimalaonline.org என்ற இணைய தளத்தில் பிரசாதம் முன்பதிவு செய்து வருபவர்கள் ஆறாம் எண் கவுண்டரில் பிரசாதம் பெற்று கொள்ளலாம். இவற்றுடன் மாளிகைப்புறம் கோயில் அருகே மூன்று, அன்னதான மண்டபம் அருகே நான்கு கவுன்டர்கள் செயல்படுகின்றன. இதில் தலா ஒரு கவுண்டர் ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இ – காணிக்கை செலுத்த வசதியாக, சன்னிதானம் கீழ் திருமுற்றத்தில் அமைந்துள்ள மகா காணிக்கையிலும், கோவிலின் வலது பக்கம் பிரசாதம் கொடுக்கும் இடத்திலும் ‘கியூஆர்’ கோடுகள் வைக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement