திமுகவுக்கு நன்றி சொன்ன பாஜக: மதுரை போஸ்டரில் உள்குத்து!

அரசியல், சினிமா, குடும்ப நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன. ஆனால் மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மட்டும் எப்போதும் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்து விடுகின்றன.

மதுரை மண்ணுக்கே உரிய நக்கலும் நைய்யாண்டியும் போஸ்டர்களில் வெளிப்படும். அந்த வகையில் மதுரையில் இன்று ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர் ஒன்று சமூகவலைதளங்களில் கண்டண்ட் ஆகியுள்ளது. அரசியல் அரங்கிலும் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று அதிமுகவுக்கு டஃப் கொடுத்து வரும் பாஜக, ஆளும்

அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால் திமுகவுக்கு நன்றி தெரிவித்து பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அடடே போட வைத்துள்ளது. அருகில் சென்று உற்றுப் பார்த்த போதுதான் புகழ்வது போல் பழித்து உயர்வு நவிற்சி அணியில் கண்டண்ட் தயாரித்திருப்பது தெரிய வந்தது.

மத்திய அரசின் சார்பில் ஏழை பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்திய அஞ்சல் துறை மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் மதுரை தெற்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் , திமுக இளைஞரணி செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு , மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு தொடங்கும், சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றது.

அது தொடர்பாக திமுக மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில திமுக அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதுஒருபுறமிருக்க மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு சொந்தம் கொண்டாடுகிறது என்றும் பாஜகவினர் குற்றம் சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்தவர்களே மத்திய அரசின் திட்டத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடத்துவது பேசு பொருளாக இருந்தது.

இதனை விமர்சிக்கும் வகையில் , பாஜக சார்பில் திமுக விற்கு நன்றி தெரிவித்து மதுரை மேற்கு பாஜக நிர்வாகிகள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.