'ரூ.500 பல்புக்கு ரூ.5000 பில் போட்டவர் எடப்பாடி' – அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி

“நம்ம ஊரு சூப்பர்” இயக்க விளம்பர பேர் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் குற்றச்சாட்டில், எள் முனை அளவு கூட உண்மை இல்லை என அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“நம்ம ஊரு சூப்பர்” இயக்க விளம்பர பேனர் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். கூறிய புகாரையடுத்து அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேனர் அச்சிட ஆணை வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை.
image
தூய்மை இயக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே விளம்பரம். அ.தி.மு.க. ஆட்சியில் தான் பேனர்களில் ஊழல் செய்துள்ளனர். ரூ.500 பல்பிற்கு ரூ. 5,000 என பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு. ஊழல் செய்வதையே முழு நேரமாக செய்து வந்தவர்கள் அவர்கள். மாநில அரசு பெறவேண்டிய நிதிகளை பெற முடியாமல் கேடு விளைவித்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. “கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன்” என எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்ன வார்த்தைகளை இவர் பயன்படுத்துகிறார். எடப்பாடிக்கு சொந்தமாக வார்த்தைகள் கூட பயன்படுத்த தெரியாதா..?
ஊரக வளர்ச்சி துறை மீது எடப்பாடி குற்றச்சாட்டு முன்வைத்த போது அருகில் இருந்த எஸ்.பி. வேலுமணிக்கு முகம் அவ்வப்போது சுருங்கி சுருங்கி விரிந்தது. எடப்பாடி நம்மைத்தான் சொல்கிறாரோ என வேலுமணிக்கு மனதில் உறுத்தி இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.