இரு விரல் பரிசோதனை ஏன் கூடாது? | காமத்துக்கு மரியாதை – S 3 E18

`பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு இரு விரல் பரிசோதனை செய்யக்கூடாது. அது, அரசியல் சட்டத்துக்கு முரணானது, அறிவியலற்றது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது. அதனால், இரு விரல் பரிசோதனை செய்யக்கூடாது’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்த வாரம், மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, `இரு விரல் பரிசோதனை’ எப்படி அறிவியலுக்குப் புறம்பானது என்பதை விளக்குகிறார். 

டாக்டர் நாராயண ரெட்டி

“இரு விரல் பரிசோதனை முடிவில், பெண்ணுறுப்பில் ஹைமன் எனப்படும் கன்னித்திரை இருக்கிறதா இல்லையா; பெண்ணுறுப்பின் பாதை எந்தளவுக்கு விரிந்து இருக்கிறது; கன்னித்திரை கிழியாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; கிழிந்திருந்தால் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது என்பன போன்ற முடிவுகளை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். 

ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிவதற்கு செக்ஸ் மட்டுமல்லாமல், விளையாட்டு, நீச்சல், பைக்கில் இருபக்கம் கால் போட்டு உட்காருதல், டான்ஸ் ஆடுதல், ஓடிப்போய் பேருந்தில் ஏறுதல் என பல காரணங்கள் இருக்கின்றன. சில பெண்களுக்கு கன்னித்திரை மெல்லியதாக இருக்கும். அதனால், அது இயல்பாகவே கிழிந்துவிடும். சில பெண்களுக்கு கன்னித்திரை தடிமனாக இருக்கும். பாலியல் வன்கொடுமை நடந்தாலும் கிழியாது. பாலியல் தொழிலாளர்கள் சிலருக்குக்கூட ஹைமன் கிழியாமல் இருக்கும். 

sex education

வெஜைனல் டெலிவரி மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பின் பாதை விரிந்துதான் இருக்கும். இவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்வதன் மூலம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை எப்படிக் கண்டறிய முடியும்? மருத்துவ ஆராய்ச்சிகள் முன்னேறாத காலத்தில் மருத்துவ புத்தகத்தில் இருந்த இந்த வழிமுறைகளை, உடனடியாக மருத்துவப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும். டாக்டர்கள் இரு விரல் பரிசோதனை செய்தார்கள் என்றால்,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்களுக்கு  உடனடியாக தண்டனையும் வழங்க வேண்டும்” என்றார் டாக்டர் நாராயண ரெட்டி. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.