இரவில் தனியாக நடந்து செல்வது ஆபத்து, காரில் வா என இளம்பெண்ணை அழைத்த சாரதி: பின்னர் நடந்த பயங்கரம்..


பிரெஞ்சு நகரம் ஒன்றில், பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு உதவுவது போல நடித்து, அவரது வாழ்வையே சீரழித்தார் ஒரு டெக்சி சாரதி.

19 வயதேயான இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

Karine Sanzalone (19) என்ற அந்த இளம்பெண், இரவு நேரத்தில் சற்று தாமதமாக பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு டெக்சி நெருங்கியுள்ளது. அந்த டெக்சியின் சாரதி, ’நீங்கள் இளம்பெண்ணாக இருக்கிறீர்கள், இரவில் தனியாக நடந்து செல்வது உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். நான் உங்களை உங்கள் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் தன் மீது அக்கறை காட்டுவதாக நம்பிய Karine, காரில் ஏறியுள்ளார். ஆனால், ஒரு இடத்தில் கொண்டு காரை விட்டு விட்டு, அந்த சாரதி Karineஐ வன்புணர்ந்துள்ளார்.

அந்த இளம்வயதில் அப்படி ஒரு தாக்குதலுக்குள்ளானதாலும், உதவுவதாக அழைத்தவரே தன்னை ஏமாற்றி சீரழித்ததாலும் கடும் அதிர்ச்சிக்குள்ளான Karine, மூன்று நாட்கள் தன் அறைக்குள்ளேயே பதுங்கிவிட்டார்.

இரவில் தனியாக நடந்து செல்வது ஆபத்து, காரில் வா என இளம்பெண்ணை அழைத்த சாரதி: பின்னர் நடந்த பயங்கரம்.. | The Driver Called The Young Lady

image – france24

அதன் பிறகே பொலிசாரிடம் செல்ல அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. பொலிசாரிடம் சென்றபோதுதான், அந்த சாரதி ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக ஓராண்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.

நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதற்குள் அவர் வேறொரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிவிட்டார்.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை?

இருந்தாலும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகே அந்த சாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, நான்கு ஆண்டுகள் சிறை. ஆனால், அவர் உடனே சிறை செல்லத் தேவையில்லை. மீண்டும் குற்றம் செய்தால் மட்டுமே அவருக்கு சிறை. அதற்குப் பின் கால்களில் மின்னணு கண்காணிப்புக் கருவி அணிந்து இரண்டு ஆண்டுகள் நடமாடவேண்டும்.

இது தண்டனையே இல்லையே என்கிறார் Karineஇன் சட்டத்தரணி. அந்த குற்றவாளி ஒரு நாள்கூட சிறையில் செலவிடப்போவதில்லை என்கிறார் அவர்.

ஆனால், அடுத்த விசாரணை 2024க்கு முன் துவங்கப்போவதில்லை என்பது அவருக்கு கிடைத்துள்ள பெருத்த ஏமாற்றம்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.