சிவகங்கை அருகே ஒரே தெருவை சேர்ந்த உறவினர்கள், வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில், சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், வைகை மீனாட்சியம்மன்புரம் கிராமத்தில், ஒரே தெருவை சேர்ந்த உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரே தெருவை சேர்ந்த உறவினர்கள், இரு குழுக்களாக பிரிந்து கட்டையாலும், கற்களாலும் ஒருவர் மீது ஒருவர் அடுத்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்து, அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.