
நண்பர்களின் செயலால் நெகிழ்ச்சியில் திவ்யா ஸ்ரீதர்
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் – திவ்யா ஸ்ரீதரின் குடும்ப பிரச்னை சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சோஷியல் மீடியாக்களிலும் வைரலானது. திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க, அதுவரை திவ்யா மீதுதான் தவறு என கூறிவந்த அர்னவ் அமைதியானார். இதற்கிடையில் நீதிமன்ற காவலில் வைக்கப்படிருந்த அர்னவுக்கு பெயில் கிடைத்தது. வெளியே வந்த அர்னவ் தான் நடித்து வந்த செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்கவிருப்பதை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன் கெத்தாக வெளியிட்டார். எனினும், திவ்யாவுடனான பிரச்னை என்ன ஆயிற்று? இருவரும் சேர்ந்தார்களா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை. மதம் மாறி திருமணம் செய்ததால் திவ்யா ஸ்ரீதரின் பெற்றோரும் அவருடன் பேசுவதாக தெரியவில்லை. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் திவ்யா ஸ்ரீதருக்கு மிகவும் சிம்பிளான முறையில் சக நடிகர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வளையல் போடும் நிகழ்ச்சியை செய்துள்ளனர். அந்த நெகிழ்வான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ள திவ்யா, 'ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.