"அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமணம்!" – பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் மத்தியப் பிரதேச முதல்வர்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால், மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதே குடியுரிமை திருத்த சட்டம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்த பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது. அதில் பொது சிவில் சட்டம் முக்கியமான ஒன்றாக பா.ஜ.க குறிவைத்திருக்கிறது. அதாவது இந்திய அரசியலமைப்பு பிரிவு 44 கூறும் பொது சிவில் சட்டம், மதம், பாலினம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டுவருவதை முன்மொழிகிறது.

பொது சிவில் சட்டம்

இதனைக் கொண்டுவரத்தான் பாஜக தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்திவருகின்றனர். ஆனால், பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவையாக இருந்தாலும், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்றவற்றில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டங்கள் இருக்கின்றன. அதுபோல இந்துக்கள் உட்பட பிற மதத்தினருக்கும் தனிச்சட்டங்கள் இருக்கின்றன. இப்படியிருக்க, பொது சிவில் சட்டம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஒருபக்கம் விசாரிக்க, மத்திய அரசு ஒருபக்கம் மாநிலங்களவை குழு ஒன்றை அமைத்து கருத்துக்கேட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்

இந்த நிலையில் பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில், அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார். பத்வானியில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ் சிங் சௌஹான், “இந்தியாவில் இப்போது பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த, மத்தியப் பிரதேசத்தில் குழு ஒன்றை நான் அமைக்கிறேன். மேலும் அதன்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமணம் இருக்கும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.