ராய்ச்சூர் : நெல் அறுவடைக்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற, நான்கு பேர் மீது அரசு பஸ் மோதியது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவை சேர்ந்தவர்கள் நாகராஜா, 25; சீனு, 30; ஜெயபால், 27; ஸ்ரீகாந்த், 30. இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் நெல் அறுவடைக்காக ராய்ச்சூர் மாவட்டம்,மஸ்கி அருகே உள்ள குடதுார் கிராமத்துக்கு சென்றனர். நான்கு பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் அறுவடை இயந்திரத்துடன் சென்றனர்.
குடதுார் கிராமத்தின் அருகே இரவு 11:30 மணி அளவில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் நாகராஜா, சீனு, ஜெயபால் ஆகிய மூன்று பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement