`அப்பா! உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்!'- இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மூத்த மகன் ஆர்யன் கான் அமெரிக்கா திரைப்படக்கல்லூரியில் படித்தவர். அவர் நடிகராக அறிமுகமாவாரா அல்லது இயக்குனராக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெப் சீரிஸ்க்கு கதை எழுதுவதாக இதற்கு முன்பு தகவல் வந்தது. தற்போது அக்கதையை எழுதி முடித்துவிட்டார். தான் இயக்குநராக அறிமுகமாகப் போவதாக ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன் கான்

தனது புகைப்படத்தை வெளியிட்டு முதல் படத்திற்கான கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், ரெட் சில்லீஸ் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றப்போவதாகவும் ஆர்யன் கான் குறிப்பிட்டுள்ளார். தனது மகனின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு கனவு நனவாகி இருப்பதாகவும், இப்போது தையரியமாக இருக்கவேண்டும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆர்யன் கான், “படப்பிடிப்பு தளத்திற்கு உங்களின் திடீர் வருகையை எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். `அப்படியென்றால் பிற்பகலில் படப்பிடிப்பை நடத்தும்படியும், அதிகாலையில் நடத்த வேண்டாம்’ என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கானும் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, ஆர்யன் கானின் படத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆர்யன் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்யன் கானை பாலிவுட்டில் நடிகராக அறிமுகப்படுத்துவதாக கரண் ஜோகர் தெரிவித்தார். ஆனால் அதனை ஆர்யன் கான் நிராகரித்துவிட்டார். ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் நடிப்பு துறையில் இறங்கி இருக்கிறார். தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். ஷாருக்கான் போன்றே ஆர்யன் கானும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது கிடையாது. மிகவும் அபூர்வமாகத்தான் பதிவிடுவார். கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.