நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹48 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.நாமக்கல்லில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி ஏலம் நேற்று விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது. நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1550 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹9769க்கும், கொட்டுபருத்தி ஒரு குவிண்டால் ₹6199க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ₹48 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.