வங்க கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மாண்டஸ் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக வலுப்பெற்று நாளை காலை வட தமிழகம்-புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 10-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.