புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம். POVA 4 என இந்த போன் அறியப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனத்தின் POVA சீரிஸ் வரிசையில் POVA 4 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேம் பிரியர்கள் மற்றும் இளைஞர்களை கருத்தில் கொண்டு நீடித்த பேட்டரி திறன் கொண்டிருக்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது என டெக்னோ தெரிவித்துள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 13-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.82 இன்ச் ஹெச்டி+ டாட்-இன் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 6000mAh பேட்டரி
- 2கே வீடியோ சப்போர்ட்
- 18 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் வசதி. 10 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- இந்த போனின் விலை ரூ.11,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது
Introducing #TECNOPOVA4, the ultimate powerhouse that gives you a courage to DARE TO HUSTLE!
With the extraordinary features like:
MTK Helio G99 6nm Powerful Processor
6000mAh Mega Battery with 18W Super ChargerGet notified: https://t.co/cbJyiwsbSk pic.twitter.com/mJAQ46A7fo
— TECNO Mobile India (@TecnoMobileInd) December 7, 2022