பாரதி கண்ணம்மாவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்

கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக வந்த தாமரை, ஓவர் நைட்டில் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். கிராமங்களில் நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த தாமரைக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடிச் செல்ல அதனை சூப்பராக பயன்படுத்திக் கொண்டார். 80 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர், சூப்பராக கேம் விளையாடியதுடன், ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தாமரையின் லைப்ஸைடல் மாறிவிட்டது என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் தேடிச் செல்லவில்லை. 

இதனால், விஜய் டிவியில் மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடித்தபின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். இப்போது அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு தேடிச் சென்றுள்ளது. அதுவும் விஜய் டிவியில் இருந்து தான் என்றாலும், பிரபலமான நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை தாமரை சரியாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்டார் தொடர்களில் ஒன்றாக இருக்கும் அந்த சீரியலில் நடிக்க தாமரை அழைக்கப்பட்டுள்ளார்.

விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தாமரை களமிறக்கப்பட்டிருப்பதன் மூலம் பெரிய டிவிஸ்டை கொடுத்திருக்கிறது பாரதி கண்ணம்மா டீம். அதனால் இப்போதைக்கு இந்த சீரியலுக்கு என்டு கார்டு இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள். பிக்பாஸ் தாமரை எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

பாரதி கண்ணம்மா தொடரில் ஆரம்பத்தில் கண்ணம்மாவின் சித்திக்கு ஒரு தம்பி இருப்பார். அவர் எப்படியாவது கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் கடைசியில் கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கண்ணம்மா மாமா கேரக்டரை அப்படியே விட்டுவிட்டார்கள். இப்போது அவருடைய மனைவியாக தான் தாமரை பாரதி கண்ணம்மா தொடரில் வர இருக்கிறாராம். இவரின் வருகையில் சீரியலில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.