பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்கவுள்ள பிரபல நாடு!


தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்கவுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டத்தை நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றவுள்ளது.

இந்த சட்டம் தற்போது பொதுமக்களின் கருத்துக்காக உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், தென்னாப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும் வாங்குவதும் இனி கிரிமினல் குற்றமாகாது.

இந்த மசோதா பாலியல் தொழிலை குற்றமற்றதாக்குவது பற்றி மட்டுமே கூறுகிறது, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்தவில்லை.

பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்கவுள்ள பிரபல நாடு! | South Africa To Decriminalise Sex Work Crime WomenRoyce Kurmelovs/Al Jazeera

இவ்வாறு பாலியல் தொழிலை குற்றமற்றதாக்குவதன் மூலம், தென்னாப்பிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் குறையும் என நம்பப்படுவதாக நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறினார்.

மேலும், இது பாலியல் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை மற்றும் சுகாதார நிலைமைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,000 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி நாட்டில் கற்பழிப்பும் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக்க தெரிவித்தனர்.

சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள கட்டிடத்தில் பல பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தென்னாப்பிரிக்காவில் 150,000-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அதேபோல், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி பாதிப்புகள் இருக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.