காரமாக சாப்பிட்டு விலா எலும்புகளை உடைத்துக்கொண்ட பெண்! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்


சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டு கடுமையாக இருமும்போது நான்கு விலா எலும்புகளை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹுவாங் (Huang) என அடையாளம் காணப்பட்ட பெண், ஷாங்காயில் வசிக்கிறார். அசாதாரணமான இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார் .

அந்தப் பெண் காரமான உணவை உண்டதும், கடுமையாக இருமலும் தொடங்கியது. அவள் மார்பில் இருந்து எதோ உடையும் சத்தம் கேட்டது, ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஹுவாங் பேசுவதிலும் சுவாசிப்பதிலும் பிரச்சினைகளை அனுபவிக்கத் தொடங்கினார், அதன் பிறகு அவர் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றார். சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு நான்கு விலா எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது.

காரமாக சாப்பிட்டு விலா எலும்புகளை உடைத்துக்கொண்ட பெண்! சீனாவில் அதிர்ச்சி சம்பவம் | Shanghai Woman Broken Ribs After Spicy Food ChinaStomp.The Straits Times

விலா எலும்புகள் குணமடைய ஒரு மாதத்திற்கு அவள் இடுப்பைச் சுற்றிக் கட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

மருத்துவ அறிக்கையின்படி, பெண்ணின் விலா எலும்புகள் உடைந்ததற்கு அடிப்படைக் காரணம் அவரது ஆரோக்கியமற்ற குறைந்த உடல் எடைதான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹுவாங் 5 அடி 6 அங்குல உயரமும், 57 கிலோ எடையும் கொண்டவர். அவரது மேல் உடல் மிகவும் மெல்லியதாக, அவரது விலா எலும்புகள் தெரியும் அளவிற்கு ஒல்லியாக காணப்பட்டுள்ளார்.

“உங்கள் தோலை தாண்டி விலா எலும்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. எலும்பைத் தாங்கும் தசைகள் எதுவும் இல்லை, எனவே இருமலின் போது உங்கள் விலா எலும்புகள் எளிதில் முறிந்துவிடும்” என்று மருத்துவர் ஹுவாங்கிடம் கூறியுள்ளார்.

எலும்புமுறிவு பாதிப்பிலிருந்து மீண்டவுடன், தனது தசை மற்றும் மேல் உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்யவுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.