ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமித்ரா. இவர்களது மகன் ஸ்ரீராமகிருஷ்ணா(22) திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு திடீரென ராமகிருஷ்ண வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில் ராமகிருஷ்ணா மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதை எடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீசார் ராமகிருஷ்ணாவிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ராமகிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணாவின் தாய் சுமித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.