கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிச.8ம் தேதி இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் நகர்ப்பகுதி, வனப்பகுதி மற்றும் சாலைகளில் ஆங்காங்கு ராட்சத மரங்கள் வேருடன் சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதன் காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முன்தினம் தடை விதித்தனர். கொடைக்கானலில் பலத்த சூறைக்காற்றுடன் மழை நேற்று காலை வரை நீடித்தது. தொடர் மழை காரணமாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் 2ம் நாளாக நேற்று மூடப்பட்டது.