
ஆர்யாவின் பிறந்த நாளில் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சாயிஷா. அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, காப்பான், கஜினிகாந்த் என பல படங்களில் நடித்தார். இதில் காப்பான் படத்தில் நடித்தபோது ஆர்யாவும், சாயிஷாவும் காதலித்தனர். அதன்பிறகு 2019ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனபோதும் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் சாயிஷா. புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே. நீங்கள் எப்போதுமே சிறந்த கணவர், சிறந்த தந்தை, சிறந்த மனிதர். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் பாக்கியசாலிகள். நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.