புதுடில்லி: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதிலிருந்து நீதிபதி பெலா திரிவேதி இருந்து விலகி உள்ளார்.
குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர்.அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்களை, 1992 நன்னடத்தை விதிகளின்படி கடந்த ஆக., 15ல் குஜராத் அரசு விடுவித்தது.
காலாவதியான விதியின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்த வழக்கு விசாரணை மஹாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றவாளிகளை நன்னடத்தையின் கீழ் விடுவிக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு இல்லை’ என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு இன்று(டிச.,13) விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பெலா திரிவேதி விலகினார். இதனை மற்றொரு நீதிபதி ரஸ்தோகி கூறினார். திரிவேதி இல்லாத மற்றொரு அமர்வு முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதி ரஸ்தோகி அறிவுறுத்தினார். நீதிபதி ஏன் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொண்டார் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement