சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக என்ட்ரி ஆகி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி அதன் பின்னர் நடிகராக உருவெடுத்தவர் தான் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவையான பேச்சால் பல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார், இவருக்கு பெரியவர்களை காட்டிலும் ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். நடிகரானது மட்டுமின்றி பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல வழிகளில் தனது திறமையை கட்டி ஜொலித்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள சில செய்திகளின்படி நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனராக புதிய பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் தான் சிவகார்த்திகேயன் இயக்குனராக போகும் செய்தியை தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியொன்றில் பேசியவர், தனது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது என்றும் தனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசியவர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டுமின்றி அந்த படத்தையும் அவரே இயக்குகிறார் என்று கூறியுள்ளார். மேலும் தான் ஐபிஎல் 2023ல் சிறப்பாக விளையாடி எனது இடத்தை மீண்டும் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#Sivakarthikeyan upcoming big project natarajan biopic #Maaveeran #ayalaan pic.twitter.com/ke4ujseG4r
— Cinetrends (@Cinetrendssk) December 13, 2022
சிவகார்த்திகேயன் மிக தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது நன்கு தெரிந்த ஒன்று. ‘கனா’ படத்தில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும், கிரிக்கெட் கோச் ஆகவும் நடித்து அசத்தியிருந்தார். இதனை வைத்து பார்க்கும்போது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது சிவகார்த்திகேயனுக்கு எளிதாக இருக்கும். தற்போது சிவகார்த்திகேயன் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடைக்கும் ‘அயலான்’ படம் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளது.